Oct 8, 2015

ஆசிரியர் சங்கம் அறிவிப்பு: நவம்பர் இறுதிக்குள் கோரிக்கையை ஏற்காவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம்


சென்னையில் ஜாக்டோ சங்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் திரண்டனர். அங்கு அரசை கண்டித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.ஜாக்டோ அமைப்பை சேர்ந்த சத்திய ராஜன், லிங்கேசன் ஆகியோர் தலைமையில் 1000–க்கும் மேற்பட்ட ஆசிரியர் ஆசிரியைகள் திரண்டு வந்திருந்தனர்.போராட்டம் குறித்து ஜாக்டோவின் உயர்மட்ட குழுஉறுப்பினர் எஸ்.சங்கர பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் பா.ம.க. நிறுவனர் இராமதாசு அறிக்கை

அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருக்கின்றனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரித்திருக்கின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

அரசு அதிரடி உத்தரவு இனி வாகனங்களில் 80 கி.மீ.,க்கு மேல் செல்ல முடியாது

   வாகனங்களில் செல்வோர், இனி மணிக்கு, 80 கி.மீ., வேகத்திற்கு மேல் செல்ல முடியாத அளவிற்கு, அனைத்து வாகனங்களிலும், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்.

தமிழக அரசுக்கு கருணாநிதி கண்டனம்: ஆசிரியர்கள் என்றால் அவ்வளவு அலட்சியமா?

ஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்தாமல் உரிய பேச்சுவார்த்தை மூலம் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசு முன் வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

கல்வித்துறை எச்சரிக்கை: போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

தமிழகம் முழுவதும் 'ஜாக்டோ' ஆசிரியர் கூட்டு இயக்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தம் நடக்கிறது.சமரச பேச்சு வார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் எத்தனை பேர் என்று மாவட்டம் வாரியாக

இணைய தளம் மூலம் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கலாம்.

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கடந்த 20.9.2015 மற்றும் 4.10.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொள்ள தவறியவர்கள், அடுத்த சிறப்பு முகாம் வரை காத்திருக்காமல் இணைய தளம் (www.elections.tn.gov.in) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகம் முழுவதும் இன்று ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்


          தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 8) வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.மாநிலம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

3 லட்சம் ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்' கில் குதிக்கின்றனர்: தமிழகம் முழுவதும் இன்று அரசுப்பள்ளிகள் இயங்குமா?

தமிழகம் முழுவதும் இன்று, அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள்,15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், பள்ளிகள் மூடப்படும் நிலையைத் தவிர்க்க, சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்த, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். எனினும், பள்ளிகள் முழுமையாக இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜி.கே.வாசன் அறிக்கை - ஆசிரியர்களுடன் நேரிடையாகப் பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்

 இது தொடர்பாக இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ''தமிழகத்தில் பணிபுரியும் இடை நிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் அரசு ஆசிரியர்களுக்கான தர ஊதியம், படி நிர்ணயம் உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். ஆசிரியர்களை தகுதித் தேர்வு முறையில் தேர்ந்தெடுப்பதை தவிர்க்க வேண்டும். 

மாணவர் வாசிப்புத்திறன் மேம்படுத்த முயற்சி

மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு, தனிப்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Oct 7, 2015

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் 1 நாள் சம்பளம் கட்

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வியாழக்கிழமை நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் 1 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் நடைபெறும் என ஜாக்டோ அறிவிப்பு

பள்ளிக்கல்வி இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை தோல்வி "ஜாக்டோ" அமைப்புடன் இன்று மாலை 4 மணிக்கு இயக்குனர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

PGTRB விரைவில் : 600 காலிப் பணியிடங்கள் இந்த ஆண்டு

அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு

கல்வித்தகுதி நிர்ணயிப்பதில் பழைய முறை பின்பற்றபடுமா இல்லை புதியமுறை அதாவது புதிய கல்வித்தகுதி பின்பற்றப்படுமா என குழப்பத்தில் விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.

பள்ளி மாணவர்களை பள்ளி வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியரை, பள்ளி வேலை செய்ய ஈடுபடுத்தக்கூடாது எனவும், மீறும் தலைமை ஆசிரியர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் மற்றும் பருப்பு தட்டுப்பாடா?

ரேஷன் கடைகளுக்கு, பாமாயில் மற்றும் பருப்பு வகைகளை, தேவைக்கு குறைவாக வழங்கினால், அந்த விவரத்தை கடை ஊழியர்கள், மாவட்ட கலெக்டருக்கு உடனே தெரிவிக்க வேண்டும்' என, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள, 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ், ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தலா, 30 ரூபாய்க்கும்; ஒரு லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

400 அங்கன்வாடி ஊழியர்களுக்கு நர்ஸ் பணி

தமிழகத்தில் அங்கன்வாடிகளில், பிளஸ் 2 முடித்து பணியாற்றுவோர், பொது சுகாதாரத்துறையில், நர்ஸ்களாக பணி அமர்த்தப்படுகின்றனர். ஏற்கனவே, 200 பேர் பயிற்சி முடித்து, அரசுப்பணியில் சேர்ந்து விட்டனர்; 500 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இணை இயக்குனர் பெருமிதம் மாணவர் வாசிப்பு திறன் அதிகரிப்பு

தமிழகத்தில் தொடக்கக் கல்வி மாணவர்கள் வாசிப்பு திறன் 10 சதவீதம் அதிகரித்துள்ளது," என, அனைவருக்கும் கல்வித் திட்ட (எஸ்.எஸ்.ஏ.,) இணை இயக்குனர் நாகராஜமுருகன் தெரிவித்தார். மதுரையில்  நிருபரிடம் அவர் கூறியதாவது: