Jun 29, 2015

ஜூலை 1 முதல் ஹெல்மெட் அணியலையாமல் சென்றால் நீதிமன்றம் அலைய தயாராக வேண்டும். போலீசார் எச்சரிக்கை



ஹெல்மெட்    அணியாமல் வந்தால் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும், வாகன பதிவு சான்று நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என போலீசார் எச்சரித்துள்ளனர்.
  இதுகுறித்து போலீசார் கூறியதாவது,டூவீலர் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். இல்லை என்றால் மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 206ன்படி, அசல் ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்று மற்றும் டூவீலர் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்; ஆவணங்களின் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என போலீசார் கூறினர்.
  அசல் ஆவணங்கள் இல்லை என்றால் டூவீலர் தற்காலிகமாக பறிமுதல் செய்யபட்டு அதற்கான ஒப்புகை சீட்டு உரிமையாளருக்கு வழங்கப்படும்.பின், உரிய அசல் ஆவணங்களை, போலீசார் வழங்கிய பின், வாகனம் விடுவிக்கப்பட்டும். ஐ.எஸ்.ஐ., தரமுடைய ஹெல்மெட் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.