Jun 28, 2015

B.ED கல்லூரிகளுக்கு புதிய நடைமுறைகள் துணைவேந்தர் ஆலோசனை



தமிழகத்தில் நடப்பு 2015-16 கல்வியாண்டு முதல் B.ED., மற்றும் M.ED., படிப்புகளுக்கான காலஅளவு  ஒரு ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாகிறது. தேசிய கவுன்சில் உத்தரவின்படி 2015 இல் இந்த புதிய நடைமுறை அமலாகிறது.இதற்காக B.ED., மற்றும் M.ED. கல்லுாரிகளில் அமல்படுத்தவேண்டிய புதிய நடைமுறைகளை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவந்தர் ஜி.விஸ்வநாதன் ஆலோசனை கூறினார்.
புதிய விதிமுறைகள் குறித்து அவர் பேசியதாவது;B.ED  முதலாம் ஆண்டில் ஒன்பது பாடங்களும், இரண்டாம் ஆண்டில் ஏழு பாடங்களும் இருக்கவேண்டும். M.ED., வகுப்புகளில் முதலாம் ஆண்டில்  6 பாடங்களும், இரண்டாம் ஆண்டில் 6 பாடங்களும் இருக்கவேண்டும்.செய்முறைப்பயிற்சி 40 நாட்களில் இருந்து 100நாட்களாக அதிகரிக்கப்படும் என்றார்.