Jun 27, 2015

அரசு பள்ளிகளில் மதிய உணவுடன் இலவசமாக பால் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை




அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும்  மதிய உணவுடன் பால் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மதிய உணவு திட்டத்தில் இலவசமாக பால் வழங்குவது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.  மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்த பால் மற்றும் பால் பொருட்களான பாலாடை கட்டி, தயிர் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடக அரசு மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. எனவே அதே போன்று பிற மாநிலங்களும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பாக பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து பாலை கொள்முதல் செய்ய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.