Jun 26, 2015

MBBS மருத்துவ படிப்புக்கான அனைத்து இடங்களும் நிரம்பின தமிழ் நாட்டில்



தமிழ்நாட்டில் மொத்த
 20 அரசு மருத்துவ கல்லூரியும் ,
ஒரு பல் மருத்துவ கல்லூரியும் உள்ளது.
 
இந்த கல்லூரியில் உள்ள மொத்தம் 2655 இடங்களில் 15 சதவீதம் (398 இடங்கள்) அகில இந்திய அளவில் ஒதுக்கப்படுகிறது. மீதி உள்ள 2257 இடங்களுக்கான கவுன்சிலிங் சென்னை ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 19-ந்தேதி தொடங்கியது. டாக்டர் கீதாலட்சுமி கல்வி இயக்குனர் கவுன்சிலங்கை தொடங்கி வைத்தார். 
          சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் முதல் நாள்  நடைபெற்றது. 76 எம்.பி.பி.எஸ் இடங்கள், ஒரு பி.டி.எஸ். இடங்களை நிரப்ப 88 பேருக்கு இன்று அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இதில் மாற்றுதிறனாளிகளுக்கு 68 இடமும், ராணுவ பிரிவில் 5 இடமும், விளையாட்டு பிரிவில் 3 இடமும், பல் மருத்துவ படிப்பில் ஒருவருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

பொது கவுன்சிலிங்  20-ந்தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைந்தது. இதில் அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டன.

ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் இரண்டாவது கட்ட கவுன்சிலிங் மற்றும் செப்டம்பர் 6–ந்தேதி மூன்றாவதுவது கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது.