Jul 12, 2015

பட்டதாரிகளை அழைக்கிறது தமிழக அரசு குரூப் -1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) உயர்பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு தொடர்பான அறிவிப்பை இன்று (வெள்ளி) வெளியிடுகிறது. இது குறித்து அதன் தலைவர் (பொறுப்பு) சி. பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜயகுமார் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :

மொத்தம் 74 காலிபணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் துணை கலெக்டர் -19, போலீஸ் துணை சூப்பிரண்டு-26, உதவி வணிக வரி அலுவலர்கள்-21, மாவட்ட பதிவாளர்கள் -8 ஆகிய பணியிடங்களும் அடக்கம். இதற்கு விண்ணப்பிக்க பட்டதாரிகளே தகுதியானவர்கள். பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் நடப்பாண்டில் டிகிரி இறுதி செமஸ்டர் எழுதி முடித்துள்ளவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 9 ஆகும். முதல்நிலை, பிரதானம் மற்றும் நேர்முக தேர்வு என 3 தேர்வுகளாக நடக்கிறது. முதல்நிலை தேர்வு நவம்பர் 8ம் தேதி தமிழகம் முழுவதும் 33 மையங்களில் நடக்கிறது.
 இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குரூப் -4 தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
ஜூலை 13ம் தேதி சென்னையில் நடக்கிறது


கடந்த ஆண்டில் குரூப்-4 தட்டச்சர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 13ம் தேதி சென்னையில் நடக்கிறது.

தமிழகமெங்கும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள ஆயிரத்து 683 தட்டச்சர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் எழுத்து தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை பிரேசர் பாலம் சாலையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. வரும் 13ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடக்கும் இந்த பணிகளுக்காக 2,176 விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள தவறுபவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது. இது தொடர்பான அட்டவணை  தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு டிஎன்பிஎஸ்சி அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்து