Jul 17, 2015

kalviseithi | 172 காலியிடங்கள் ; போட்டிபோட்டது 800 பேர் எந்த பதவிக்குன்னு நீங்களே படிச்சு தெரிஞ்சுக்குங்க


இன்டர்வியூவின்போது 172 பணியிடத்துக்கு 800 பேர் பங்கேற்றதால கடும் போட்டி ஏற்பட்டது. எந்த பேங்குலன்னு கேட்காதீங்க. இது மதுரை மாவட்ட சத்துணவு சமையலர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு சமாச்சாரங்க.
மதுரை மாவட்டத்துல 13 வட்டாரங்களில் காலியாக இருக்கும் சத்துணவு சமையலர் பணிக்கான நேர்முக தேர்வு மதுரை கலெக்டர் ஆபீசில் ஜூலை 15ம் தேதி நடந்தது.  ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 முதல் 20 காலியிடங்கள் வீதம் மொத்தம் 172 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன. இந்த பதவிகளுக்காக மொத்தம்800 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவரும் இன்டர்வியூவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதில் தேர்வானவர்கள் பற்றிய முழுவிபரம் விரைவில் ö வளியாகும் என்று சத்துணவு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இன்டர்வியூவை மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 10 குழுக்களாக பிரித்து ஒரு குழுவுக்க ஒரு ஊரக வளர்ச்சி துறை அலுவலர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.