Jul 14, 2015

பிளஸ் 1 பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் புது சிலபஸ் அறிமுகமாகுது


பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதரபழசாகிவிட்டதால், அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் அதர பழசாகிவிட்ட பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களை மாற்ற அரசு திட்டமிட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக்குழு அமைத்து 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு 2013ம் ஆண்டிலேயே வல்லுனர் குழுவும் ஒப்புதல் வழங்கிவிட்டது. அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த பாடத்திட்டம் என்ன காரணத்தினாலோ கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் வரும் கல்வியாண்டிற்குள் இந்த பாடத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பு<திய சிலபஸில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களில் பெரியளவில் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.