Jul 20, 2015

நடப்பாண்டு முதல் புதுப்பொலிவு பெறுது பிஎட் புது பாடங்கள் சேர்ப்பு : 2 ஆண்டாகும் கல்விகாலம்

கணிணி அறிவியல், யோகா, விளையாட்டு போன்ற பல புதிய பாடங்களுடன் பிஎட் படிப்பு இந்த ஆண்டு முதல் புதுப்பொலிவு பெறுகிறது.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில் பிஎட்- எம்எட்-பிபிஎட் போன்ற படிப்புகளுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது ஏஎன்று ஆசிரியர் கல்வியியல் கல்லுõரிகள் சார்பில் ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. எனினும் மத்திய அரசு, தேசிய கவுன்சிலின் உத்தரவை இந்த கல்வியாண்டு முதலே அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்த வேண்டும் என்று கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளதன் விளைவாக புதிய விதிமுறைகள் இந்த ஆண்டே தமிழகத்தில் அறிமுகமாகிறது. அதன்படி ஒரு ஆண்டு ஆசிரியர் படிப்பு இந்த கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் புதிதாக கணிணி அறிவியல், யோகா, விளையாட்டு போன்ற பல பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 690 கல்லுõரிகளில் இந்த நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் அனைத்து கல்லுõரிகளுக்கும் இந்த விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில் நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே விதிமுறைகளில் மாற்றம் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.