Jul 18, 2015

223.17 கோடியில் 6.15 லட்சம் இலவச சைக்கிள்



அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடப்பாண்டில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 6.15 லட்சம் சைக்கிள் வினியோகிக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தை சென்னையில் அமைந்துள்ள தலைமை செயலகத்தில் கடந்த வியாழனன்று தொடங்கி வைத்து, தன் கைகளால் ஐந்து மாணவருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். அதன்படி நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் 2.73 லட்சம் மாணவர் மற்றும் 3.41 லட்சம் மாணவியர் என மொத்தம் 6.15 லட்சம் பேருக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 223.17 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.