Jul 20, 2015

26ம் தேதியன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு-2 விவரங்கள் இணையத்தில் வெளியீடு


வரும் 26ம் தேதியன்று ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-2(தொகுதி-2) நேர்முகத்தேர்வுக்குட்பட்ட ஆயிரத்து 241 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வினை நடத்த உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மேலும் கூறியிருப்பதாவது :  இந்த தேர்வுக்கு 6.2 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து உரிய கட்டணங்களை செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி2க்கு விண்ணப்பித்தவர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களது விண்ணப்பம் பெறப்பட்டதை சரிபார்த்துக்கொள்ளலாம். கட்டணம் முறையாக செலுத்தி இணையதளத்தில் பெயர் இடம்பெறாத விண்ணப்பதாரர்கள் தங்களது பணம் செலுத்திய ரசீது நகலுடன் கீழ்கணண்ட தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பதாரரின் பெயர்: தொகுதி-ஐஐ க்கான விண்ணப்பப் பதிவு எண் விண்ணப்ப / தேர்வுக் கட்டணம் மற்றும் செலுத்திய இடம்: அஞ்சலகம் / இந்தியன் வங்கி வங்கிக்கிளை / அஞ்சலக முகவரி மேற்படி இணையதளத்தில் உள்ள விவரங்கள் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஒரு ஒப்புகை மட்டுமே ஆகும். விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கான தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தேர்வு-2 (தொகுதி-2)க்கு விண்ணப்பம் செலுத்தி பதிவு எண் கிடைக்கப்பெற்றவர்கள் வரும் 26ம் தேதி முற்பகலில் நடக்கும் தேர்வில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.