Jul 21, 2015

ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அட்டவணை, ஜூலை 29 முதல் ஆக 18 வரை நடத்தப்படுது?


ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் கலந்தாய்வு வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 18க்குள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வை தமிழக அரசு நடத்தி வருகிறது. இதில் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பகுதிகளுக்கு டிரான்ஸ்பர் வாங்கிக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டு முதல் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பயின்றோர்கள் மட்டுமே கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும் என்று அறிவிப்பு வெளியிட்டு ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது தமிழக அரசு. இது ஒருபுறமிருக்க ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை இந்த கலந்தாய்வு நடத்த உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசின் அனுமதி பெற்ற பிறகே, அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியிடப்படும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.