Jul 14, 2015

அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டும்

எஸ்எஸ்ஏ நடுநிலைப்பள்ளிகளை போல அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் மூன்று ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கை :தற்போது எஸ்எஸ்ஏ நடுநிலைப்பள்ளியில் மட்டும் 3 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர். இதை அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களுக்கும் வேலைப்பிரச்னை முடிவுக்கு வரும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 20ல் நடைபெறும் அகில இந்திய ஸ்டிரைக்கில் இயக்க உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி உள்பட பல முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.