Jul 20, 2015

5 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவோர் ஆக.31க்குள் வருமான வரி தாக்கல் செய்யணும்



ஆண்டுக்கு ஐந்து லட்சத்துக்கும் மேல் சம்பளம்/வருமானம் பெறுவோர் தங்களின் வருமான வரியை வரும் ஆகஸ்ட் 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கை ; உட்படாத மாத சம்பளக்காரர்கள், வீடு, வாகனம் மூலம் வருமானம் பெறுவோர் மற்றும் தனியாக தொழில் செய்வோர் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தங்களது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஐந்து லட்சத்துக்கும் மேல் வருமானம் பெறுவோர் மற்றும் வருமான வரி பிடித்த தொகையை திரும்ப கோருவோர் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் அல்லது தொழில் மூலமாக வருமானம் பெறுவோர் தங்களது வருமான வரிக்கணக்கை கட்டாயம் மின்னணு முறையில்(ஆன்லைனில்)மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வீடு மூலம் வருவாய் பெறுவோர்/மாத ஊதியம் பெறுவோர் பயன்படுத்த வசதியாக ஐடிஆர்-2ஏ என்ற எளிமையான படிவம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தணிக்கைக்கு உட்பட்டு வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோர் வரும் செப்டம்பர் 30க்குள் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.