Jul 13, 2015

சனிக்கிழமைகளில் வங்கிகள் இனி., முழுநேரம் இயங்கும்



நாடெங்கிலும்  அனைத்து வங்கிகளும் இனி சில சனிக்கிழமைகளில் நாள் முழுவதும் செயல்பட உள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் சனிக்கிழமைகளில் பிற்பகல் 2 மணிவரை இயங்கி வருகின்றன. இந்நிலையில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம், இன்டர்நெட் பேங்கிங் ஆகிய வசதிகளை அதிகம் பயன்படுத்துவதால் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்குமாறு வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதை இந்திய வங்கிகள் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

 அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது என்றும், 1 மற்றும் 3வது சனிக்கிழமைகளில் வழக்கமான அரை நாளுக்கு பதிலாக முழு நாளும் செயல்படும் என்றும் இந்த நடைமுறை ஜூலை 15 முதல் அமல்படுத்த நிதி அமைச்சகம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.