Jul 14, 2015

நாங்களும் இங்கிலீஷ் மீடியம் வச்சிருக்கோம்ல ! உரிய வசதியின்றி ஜம்பம் காட்டும் அரசுப்பள்ளிகள்


டவுனுக்கு போயி படிக்க ப்ரீ பஸ் பாஸ் கொடுத்துட்டு, உள்ளூர்ல கிளாஸ் வசதியும் செய்துதராம டீச்சரும் இல்லாம எப்படிங்க... இங்கிலீஷ் மீடியம் படிக்க புள்ளைங்க வரும்னு திருவள்ளுவர் மாவட்டத்தில ஒரே புலம்பல் சத்தம் கேட்குதாம்.

தி ருவள்ளுவர் மாவட்டத்துல தொடக்கப்பள்ளி(1397) நடுநிலைப்பள்ளி(271)  உயர்நிலை மேல்நிலைப்பள்ளி(602) என மொத்தமா 2,270 அரசு பள்ளிகள் இருக்கு. இதுல 2012-13ல் 1ம் வகுப்பிலும், அடுத்த ஆண்டு முதல் 6ம் வகுப்பிலும் இங்கிலீஷ் மீடியம் தொடங்கினாங்க. தனியார் மெட்ரிக் ஸ்கூலுக்கு போற மாணவர்களை தடுக்க இந்த ஐடியா போட்டுச்சு அரசு. ஆனா, ஸ்கூல்ல இங்கிலீஷ் மீடியத்துக்குன்னு சரியா கிளாஸ் வசதியோ, டீச்சரோ நியமிக்காததால, படிக்கிற பசங்க, தமிழ் மீடியம் பசங்களோட சேர்ந்து இருக்கிற நிலைமை இருந்து வருதாம். இதோட  ப்ரீயா பஸ் பாஸ் கொடுக்கிறதால, டவுனுக்கு போயி நல்ல ஸ்கூல்ல படிச்சுக்கலாம்னு போயிடுறாங்களாம்.

இது நெசமான்னு சில சீனியர் ஹெட்மாஸ்டர்களை கேட்டோம். அவங்க என்ன சொல்றாங்கன்னா...  2 கி.மீ. ஒரு அரசு பள்ளி என்ற வீதத்தில் ஸ்கூல் துறந்தாங்க. ஆனா..கவர்மென்ட் ப்ரீயா வழங்குற பஸ் பாஸால பசங்க, டவுனுக்கு படிக்க போயிடுறாங்க. இதனால இப்போ கிராம பள்ளிகள்ல அட்மிஷன் குறைஞ்சிட்டே வருது. இங்கீலீஷ் மீடியம் காத்து வாங்குது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தை சேர்ந்த ஒருவரோ.., இங்கிலீஷ் மீடியம் டெவலப் பண்ணனும்னு  சொல்லிட்டு, மறுபக்கம் வகுப்போ, ஆசிரியரோ இல்லன்னா எப்படி? ஏற்கனவே தமிழ்ல படிக்கிற தாழ்த்தப்பட்ட  கிராம மாணவர்கள் 10/பிளஸ்2ல போதிய பயிற்சி இல்லாததால  பாதிபேர்தான் தேர்ச்சி ஆகுறாங்க. இதுல இங்கிலீஷ் மீடியத்தையும் இப்படி கவனிக்காம விட்டா..அரசு பள்ளிகள் அம்பேலாகிடும்னு அதிர்ச்சி கொடுக்கிறாப்ல. சம்பந்தப்பட்ட அமைச்சர் கவனிச்சா தேவல!