Jul 17, 2015

மூணு வருஷம் முடிஞ்சா தான் டிரான்ஸ்பர், ஆசிரியர்களுக்கு அரசு கொடுத்த ஷாக்


குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்தால் மட்டுமே டிரான்ஸ்பர் கேட்டு கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளலாம் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி அஹித்துள்ளது. இதனால் எப்படியாவது சொந்த ஊருக்கு போயிடலாம்னு கனவு கண்டுகொண்டிருந்த சில ஆசிரியர்களுக்கு இது பேரிடியாக வந்துள்ளது.


த ங்களுக்கு விருப்பமான ஊரை கேட்டு தேர்ந்தெடுக்க வசதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான இடமாற்ற கவுன்சிலிங்கை தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்படி சம்பந்தப்பட்ட ஊரில் உள்ள காலியிடம் மற்றும் இதர தகுதிகளின் அடிப்படையில் கேட்ட ஊருக்கு மாறுதல் கிடைத்துவந்தது. இந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற எளிமையான விதி பின்பற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த தகுதி வரம்பை தற்போது 3 ஆண்டுகளாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இடமாற்ற கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியும். ஆனால் பார்வையற்றவர்கள்/40 % அதிகமான உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் ராணுவத்தில் பணிபுரிவோரின் மனைவி ஆகியோருக்கும், இதயம், சிறுநீரக மாற்று அöவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது. அதேப்போல பணிநிரவல் பட்டதாரி ஆசிரியர் பதவிகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன.

இதற்கான நிரவலுக்கு பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கப்படும். மேலும் கடந்த ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறை இயக்ணீத்தின் கீழ், பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் நடப்பு கல்வியாண்டில் தொடக்கல்வித்துறையிலிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகுமாறுதல் ஆசிரியர் மாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

மேலும் பிற்படுத்தப்பட்டோர்/ஆதிதிராவிடர் /பழங்குடியினர் நலத்துறை மற்றும் கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் வழங்குவதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு மற்றும் இடமாற்ற கவுன்சிலிங் இம்மாத இறுதியில் நடக்கும் என தெரிகிறது.