Jul 17, 2015

சித்த மருத்துவ படிப்புக்கு மவுசு கூடுது நடப்பாண்டில் அதிகம் பேர் விண்ணப்பம்


பல மாணவர்களின் கனவு படிப்பான டாக்டர் பட்டம், ஆயிரத்தில் ஒருவருக்கு தான் கிடைக்கிறது. அதிகப்படியான மதிப்பெண், நடுத்தர வர்க்தம் கனவு காண முடியாத கட்டணம் என டாக்டர் படிப்பு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இதனால் இயற்கை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தற்போது மவுசு அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டை விட சித்த மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இதுவரை 4,400 பேர் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.
த மிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு ஆறு அரசு மருத்துவ கல்லுõரிகளில் மொத்தம் 336 இடங்கள் மற்றும் சுயநிதி கல்லுõரிகளில் ஆயிரத்து 143 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இதுவரை 4,400 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் மொத்தம் 3, 800 விண்ணப்பங்களே வந்த நிலையில், இந்த ஆண்டு ஜூன் 29ம் தேதி தொடங்கி சில நாட்களுக்குள்ளேயே விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விண்ணப்ப வினியோகம் ஜூலை 31ம் தேதி வரை நடைபெற உள்ளதால் ஐந்தாயிரம் என்ற புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.