Jul 14, 2015

பள்ளியிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யலாம் நாளை முதல் அறிமுகம்



கல்லுõரிகளில் நேர்முகதேர்வு நடத்தப்படுவதை போல, நாளை முதல் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை செய்யலாம். இந்த வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களது 10ம் வகுப்பு கல்வியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக  ஐடிகார்டு எண், ஆதார் அட்டை எண்,  ரேசன் கார்டு, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மார்க்ஷீட் கொடுக்கப்படும் நாளில் கொண்டு வந்து, பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம். 10ம் வகுப்பு பதிவு எண் தெரியாதவர்கள், எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் சென்று தெரிந்துகொள்ளலாம். இந்த மாதம் 15 முதல் 29ம் தேதி வரை அந்தந்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்துகொள்ளலாம். ஏற்கனவே      தீதீதீ.tணதிஞுடூச்டிதிச்ச்டிணீணீத.ஞ்ணிதி.டிண        என்ற  வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று ஏற்கனவே தமிழக அரசு வசதி செய்து தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.