Jul 14, 2015

இனி வாட்ஸ் அப்ல கடலை மட்டும் இல்ல லைக்கும் போடலாம்!

whatsapp க்கான பட முடிவு
வறுக்கி வாங்கி தின்ன முடியாதவன்கூட வாட்ஸ் அப் வச்சிருக்கிற அளவுக்கு நம் வாழ்வின் அங்கமாகிவிட்ட வாட்ஸ்அப்பை லைக் பண்ணாதவங்க இருக்க முடியாது. விரைவில் வாட்ஸ் அப்ல வருவதையும் லைக் போடலாமாங்க.

பேஸ்புக்ல லைக் போடும் வசதி இருப்பதை போல, வாட்ஸ் அப்பிலும் வசதி  வருது. இதனால் தங்களுக்கு வரும் மெசேஜ்கள் பிடிச்சிருந்தாலும், இல்ல  அனுப்புறவங்கள ரொம்ப பிடிச்சிருந்தாலும் லைக் போட்டு அனுப்புறவங்கள கவர் பண்ணலாம். 
மேலும் செல்போன் வச்சிருக்கிறவங்கல போல கம்ப்யூட்டர்ல பயன்படுத்துறவங்களுக்கான வசதியையும் மேம்படுத்தியிருக்கு வாட்ஸ் அப்.  அதன்படி அவங்களும் ஸ்டேட்டஸ் மாத்தலாம், புரொபைல் படத்தை மாத்தலாம், அரட்டையை நீக்கலாம், சேவ் பண்ணலாம், குரூப்புக்கு அட்மின்னா பதவி வகிக்கலாம்னு தெரியுது. லைக் பட்டன் எப்போ வருதுன்னு அதிகாரப்பூர்வமா அறிவிக்கபடல. இப்போதான் லைக் போட்டு பார்த்து வாட்ஸ் அப் டெஸ்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறதா தகவல்.  சீக்கிரம்பா இப்பவே கை நமநமன்னு அரிக்குது லைக் போடுறதுக்கு!