Jul 17, 2015

இனி., மகளிர் பள்ளிகளில் சார்-ஆடவர் பள்ளிகளில் மிஸ்


இனி பசங்களுக்கு புது மிஸ்சும், பொண்ணுங்களுக்கு புது சாரும் கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆம். பள்ளியில் ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லை என்றால், மகளிர் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களையும், ஆண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்களையும் நியமிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு, அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, மேல்நிøல்பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

அதேப்போல ஆண்கள் பள்ளிக்கும் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என உத்தரவு இருந்தது. இப்போது இந்த உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தேவைக்கேற்ப இல்லையென்றால் மகளிர் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களையும், அதேப்போல ஆண்களுக்கான பள்ளிகளில் பெண் ஆசிரியர்களையும் நியமிக்கலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்பஐ ஆண்/பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இனி மகளிர்பள்ளிகளில் சார்கள் பாடம் நடத்துவதையும், ஆடவர் பள்ளிகளில் மிஸ் பாடம் நடத்துவதையும் பார்க்க முடியும்போல.