Jul 18, 2015

kalviseithi | பிளஸ்2 தேர்ச்சி விகிதம் குறைவு எதிரொலி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி: அரசு முடிவு



பிளஸ்2 தேர்ச்சி சதவீதம் குறைந்ததையடுத்து, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் வெளியான பிளஸ்2 தேர்வு முடிவுகளில் தேர்ச்சி விகிதிம் குறித்து மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அறிவியலை விட கலைப்பிரிவில் தேர்ச்சி விகிதிம் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து பொருளாதாரம், வணிகவியல், கணக்குப்பதவியில், வரலாறு, தொழிற்கல்வி உள்ளிட்ட 10 பாடங்களில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக அந்த 10 பிரிவுகளில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்களிடம் கற்றல் குறைகளை கண்டறிந்து அதிகப்படுத்த ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் விளைவாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அதை பயிற்சி அளித்து அதன் மூலம் தேர்ச்சி விகிதம் அந்த பத்து பாடங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.