Jul 17, 2015

kalviseithi | விரைவில் ஆசிரியர் பற்றாக்குறையே இருக்காது புதுவை முதல்வர் ரங்கசாமி பளிச்


புதுச்சேரியில் பாகூர் தொகுதிக்குட்பட்ட குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது. இவற்றை திறந்து வைத்து புதுவை முதல்வர் ரங்கசாமி பேசியாதாவது :

காமராஜர் வழியில் புதுவை அரசு, ஏழை மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் இலவச கல்வி உள்பட பல எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசிடம் நிதி இல்லை என்று குறைகூறுகின்றனர். அரசிடம் நிதி இருக்கிறதா இல்லையா என்பதை அரசாளும் என்னை கேட்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற அனைத்து வாக்குகளையும் புதுவை அரசு நிறைவேற்றி வருகிறது. ஆசிரியர் நியமனம் தொடர்பாக கோர்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், புதுச்சேரியில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இது தற்காலிகமானது தான், விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் 500 புதிய ஆசிரியர்கள் பணிநியமனம் செய்யப்படுவார்கள். எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறையே இல்லாத புதுவை என்ற பெருமை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.