Jul 18, 2015

பெரம்பலுõரில் பள்ளிபேருந்து கவிழ்ந்து விபத்து 63 மாணவர்கள் படுகாயம் : பஸ் எப்சி யில் சர்ச்சை



பெரம்பலுõரில் தனியார் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 63 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
பெரம்பலுõர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனலட்சுமி சீனிவாசன் என்ற தனியார் பள்ளி, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் தனது மாணவர்களை அழைத்து சென்று வருகிறது. கடந்த வியாழன்று காலை வழக்கம்போல மொத்தம் 93 மாணவர்களை ஏற்றிச்சென்ற அந்த ஸ்கூல் பஸ்சை ராஜாதி ராஜா என்பவர் ஓட்டி வந்தார்.

பெரம்பலுõரில் உள்ள பாலக்கரையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் வந்தபோது, திடீரென எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் சிக்கிய மாணவர்கள் கதற, உடனடியாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், மாணவர்களை மீட்டு பெரம்பலுõர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

பஸ் டிரைவர் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. அரியலுõரில் பள்ளிவேன் கவிழ்ந்து விபத்தில் 4 மாணவர்கள் பலியான சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே அண்டை மாவட்டமான பெரம்பலுõரில் இந்த விபத்து நடந்துள்ளது.


இதனிடையே விபத்துக்குள்ளான பஸ்சுக்கு முதலில் எப்சி மறுக்கப்பட்டு பின்னர் வழங்கப்பட்டுள்ளதாக புது சர்ச்சை எழுந்துள்ளது. இப்படிப்பட்ட எப்சிக்கள் வழங்கப்படுவது இன்னும் எத்தனை பிஞ்சுகளை பலிவாங்க காத்திருக்கிறதோ தெரியவில்லை. கும்பகோணம் தீவிபத்து போல பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு அரசு விழித்துக்கொண்டால் தேவல.