Jul 18, 2015

padasalai | பயன்பாட்டு வேதியியல் படிச்சிருக்கீங்களா? இனி பிஎட் படிக்கலாம்



2015-16 கல்வியாண்டுக்கான பிஎட் சேர்க்கையில் இளநிலை பயன்பாட்டு வேதியியல் பட்டம் (அப்ளைடு கெமிஸ்ட்ரி) முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் சில நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன. அதன் விபரம் :   பொருளாதாரம், வணிகவியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் முடித்தவர்களும், கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், உயிரி இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், பயன்பாட்டு வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் அறிவியல், நுண் உயிரியல், வரலாறு, <புவியியல், பயன்பாட்டு புவியியல், கணிணி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணிணி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளநிலை பட்டங்களை முடித்தவர்கள் பிஎட் படிப்புக்கு இந்த ஆண்டு விண்ணப்பிக்கலாம்.
ஒசி பிரிவினர் 50 % மற்றும் பிசி, பிசிஎம், பிரிவினர் 45% எம்பிசி பிரிவினர் 43 % எஸ்சி<. எஸ்டி எஸ்சிஏ பிரிவினர் 40% என்றளவில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம். நடப்பாண்டு முதல் பிஎட் படிப்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது