Aug 30, 2015

விண்டோஸ் 10க்கு அமோக வரவேற்பு- 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் டவுன்லோட் செய்துள்ளனர்.



விண்டோஸ் 10 மைக்ரோசாப்ட்டின் பதிப்புக்கு மக்களிடையே அமோக வரவேற்பு ஏற்பட்டுள்ளது.விண்டோஸ் 10  வெளியான 24 மணி நேரத்தில் ஒன்றரை கோடி பேர் பதிவிறக்கம் செய்தனர். விண்டோஸ் 10 பதிப்பு வெளியான இருபத்திநான்கு மணி நேரத்தில் சுமார் ஒன்றரை கோடி பேர் தமது கம்ப்யூட்டர்களை இலவசமாக தரம் உயர்த்திக் கொண்டுள்ளனர் என்று கூறினால் மிகையாகது.


விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ் xp, 7, 8, 8.1 மாடல் கம்ப்யூட்டர்கள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள்
விண்டோஸ் 10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்தது.

விண்டோஸ் 7 பதிப்புக்கு  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.ஆனால் அதன் பிறகு வெளியான விண்டோஸ் 8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை என கூறலாம். அதன் பின்னர்  விண்டோஸ் 9 வெளியாகவில்லை. 

3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் வெளியான விண்டோஸ் 10 பதிப்பு பல புதிய வசதிகளுடன் என்பது வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment