Aug 28, 2015

தமிழ்நாட்டில் 12 நகரங்கள் தேர்வு- ஸ்மார்ட் சிட்டி திட்டம்


     ஸ்மார்ட் நகரங்கள் என்பது அனைத்து விதமான பொருளாதார, நிதி, கட்டமைப்பு , சமுதாய மற்றும் உள்கட்டமைப்பு,  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நகர மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான திட்டமாகும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான  பட்டியல் வெளியீடு
தமிழகத்தில்
1.மதுரை
2.கோவை
3.சென்னை
4. வேலூர்
5. சேலம்,
6.திருப்பூர்
7.திருச்சி
8.திண்டுக்கல்,
9.தஞ்சை,
10.தூத்துக்குடி,
11.திருநெல்வேலி,
12.ஈரோடு
ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்ட நகரங்களில் உலகத்தரத்திலான  நிலையான சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த தீர்வுகள் வழங்குவதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும்.
ஸ்மார்ட் நகரங்கள் ஏற்படும் நன்மைகள்
பொருளாதார வளர்ச்சி, வாழ்க்கைத் தரம் மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சியை விரைவுபடுத்தும்,ஒவ்வொரு ஸ்மார்ட் நகரத்திற்கு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் கிடைக்கும். இதற்கான நகரங்கள் போட்டி மூலம் தேர்ந்து எடுக்கப்படும்.சொத்துக்கள், வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு தூய்மையான, வசதிகள் நிறைந்த ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்படும்.குடிமக்களுக்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும். தூய்மையான தண்ணீர், கழிப்பிட வசதி, திடக்கழிவு மேலாண்மை, போக்குவரத்து வசதி, ஏழைகளுக்கு வீட்டு வசதி, மின் வசதி, மின்னணு ஆளுமை உள்ளிட்டவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பொதுமக்கள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, நிலையான நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.அடிப்படை சேவைகள், குழந்தைகளின் தேவைகள், மழைநீர் வடிகால் அமைப்பு, பசுமையை பாதுகாக்க பூங்காக்கள் ஆகியவை நிறைவேற்றப்படும்.தொழில்முறை நகராட்சி பணிநிலை, நகராட்சி வரி மதிப்பீடு நகர்ப்பகுதிகளில் சீர்திருத்தங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
அம்ருத் திட்டம் மூலம் 500 நகரங்களில் வளர்ச்சி திட்டங்கள் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும். ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதன் மூலம் கிராமங்கள் நகரங்கள் இடையே உள்ள இடைவெளி குறையும்.ஏழை மக்களின் பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு ஆகிய நோக்கங்களும் நிறைவேறும் என்பது மத்திய அரசின் உறுதியான நம்பிக்கை ஆகும்.