Aug 22, 2015

பள்ளிக்கல்வித் துறை உத்தரவு: 14500 சிறப்பு ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல்


அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை, கைவினை, உடற்கல்வி போன்ற சிறப்பு பாடங்களுக்கு, 15000 சிறப்பு ஆசிரியர்ககளும், 4,000 நிரந்தர ஆசிரியர்ககளும் பணியாற்றுகின்றனர்.இவர்களில், சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு தகுதி தேர்வு வைத்து,அதன் மூலம் பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது.

சிறப்பு தகுதி தேர்வுக்கான தேர்வு பாடத்திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதனால், இந்த ஆசிரியர்கள் எப்போது வேண்டுமானாலும், தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்பட்டு, பணி வரன்முறை செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது.இருந்தலும், சிறப்பு தகுதி தேர்வு நடந்தால், தங்களது பணி பறிக்கப்படுமோ என்ற பயத்தில், பல சிறப்பு ஆசிரியர்கள் உள்ளனர்.

எனவே, சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நிரவல் மூலம், பணியிட மாறுதல் வழங்க, பள்ளிக்கல்விதுறை திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார். பணி நிரவல் ஆசிரியர் பட்டியல், வரும், 28ம் தேதிக்குள் தயார் செய்து அனுப்ப வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் பூஜா குல்கர்னி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.