Aug 19, 2015

பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க 25000 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி


        பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு முழுவதும் 25000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
     முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கல்வித்தரத்தை அதிகரிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அதிக நிதியை  பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கி உள்ளார்.
           அதன்படி விலை இல்லா கல்வி பொருட்கள் மாணவ-மாணவிகளுக்கு விலையின்றி கிடைத்து வருகிறது.இந்த நிலையில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முதன்மை செயலாளர் த.சபீதா அவ்வப்போது கூட்டம் நடத்தி அதை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
பிளஸ்-2 தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் கண்காணிப்பில் ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.