Sep 1, 2015

பெட்ரோல் 2ரூபாயும், டீசல் 50 பைசாவும் விலை குறைப்பு


பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் 15 நாட்களுக்கு ஒரு முறை பெட்ரோல் டீசல் விலையை கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்கின்றன. 


அதன்படி கடந்த 15ந் தேதி மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின்போது, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 50.68 டாலராக இருந்தது.
ஆனால் தற்ப்போது கச்சா எண்ணெய் விலை வெகுவாக சரிந்து தற்போது பீப்பாய் ஒன்று 28 டாலராக உள்ளது.இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் குறைத்துள்ளது

No comments:

Post a Comment