Aug 21, 2015

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் 2018 வரை: நீதிபதி சிங்காரவேலு கமிட்டி அறிவிப்பு


2015 முதல் 2018 வரை தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக நீதிபதி எஸ்.ஆர்.சிங்கார வேலு கமிட்டி அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் தமிழக அரசு கமிட்டியை அமைத்தது. 
இந்த குழுவின் பரிந்துரைப்படி, 2015-16, 2016-17, 2017-18 ஆகிய 3கல்வி ஆண்டுகளுக்கு தனியார் பள்ளி களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கான கட்டண விவரம்www.tn.gov.in)  என்ற தமிழக அரசின் இணையதளத்தில்நேற்று வெளியிடப்பட்டது. தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை இந்த இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.