Aug 28, 2015

529 பட்டதாரி, இடை நிலை ஆசிரியர்கள், பிற மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்.



          பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்கள்,529 பேர், பிற மாவட்டங்களுக்கு செல்ல விண்ணப்பித்துள்ளனர்; இவர்களுக்கான கலந்தாய்வு, நாளை துவங்குகிறது.  
பட்டதாரி ஆசிரியர்கள், இடை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் சார்பில்,  மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இடம் மாறுதல் கலந்தாய்வு, நாளை துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு துவங்கும் கலந்தாய்வு, ஆன்-லைன் முறையில் நடைபெறும்.
 திருப்பூர் K.S.C. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 29ம் தேதி, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும்.
 30ம் தேதி, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பாடம் நடத்தும், இடைநிலை ஆசிரியர்களுக்கும், கலந்தாய்வு நடைபெற உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, பிற மாவட்டங்களில் பணியாற்ற மொத்தம் 529 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.