Aug 19, 2015

வங்கிகளில் 80,000 காலியிடங்கள் கல்லூரிகளில் பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் முடிவு


பொதுத்துறை  வங்கிகளில் 80,000 காலியிடங்கள் உள்ளதால் கல்லூரிகளில் நேரடியாக பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் முடிவு செய்துள்ளனர். பொதுத் துறை வங்கிகளில் 80 ஆயிரம் பேர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
         இந்த நிலையில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே காலியிடங்களை நிரப்புவது தொடர்பான விதிமுறைகளும் எளிதாக்கப்பட்டுள்ளன.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இது குறித்து பேசுகையில், கல்லூரிகளில் பணியாளர்களை தேர்வு செய்ய வங்கிகள் விருப்பம் கொண்டிருப்பதாகவும் ஆனால் இப்படி நேரடியாக தேர்வு செய்வதில்  சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.இதற்கு தீர்வு என்ன என்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் மொத்தம் 22 பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு  5 துணை வங்கிகளும் உள்ளன.