Aug 21, 2015

மண்டல அஞ்சல் தலைவர் தகவல்: இனி அஞ்சலக சேமிப்பு கணக்குடையவர்கள் ATM CARD க்கு விண்ணப்பிக்கலாம்.



அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் ATM கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
சென்னையில் மயிலாப்பூர், அண்ணா சாலை, பரங்கிமலை, தியாகராய நகர், தாம்பரம் ஆகிய தலைமை அஞ்சல் நிலையங்களில் அஞ்சலக ATM இயந்திரங்கள் உள்ளன.இந்த ATM யில் எப்போதும் போதிய அளவு பணம் உள்ளது.
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள், மேற்கண்ட ATM மையங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இனி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் நிலையத்தில் ATM கார்டுக்காக விண்ணப்பிக்கலாம். ATM CARD பயன்படுத்த சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 யாவது இருப்பு இருக்க வேண்டும்.இவ்வாறு மெர்வின் அலெக்சாண்டர் கூறினார்.