Sep 1, 2015

அரசு உத்தரவு:ராக்கிங்கில் ஈடுபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்


மருத்துவக் கல்லூரிகள் இன்று 1.9.2015 முதல் திறக்கபடுகின்றன. ராக்கிங்கில் டுபடுவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும், என அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் 20 அரசு மருத்துவக்கல்லுரிகள் உள்ளன.மருத்துவ படிப்பில் சேர இரண்டு கட்ட கலந்தாய்வு நடைபெற்று மருத்துவ படிப்பில் இடங்களை தேர்ந்தெடுத்த மாணவ,மாணவியர்க்கு இன்று கல்லூரிகள் திறக்கபடுகின்றன.

  மருத்துவக் கல்லூரிகளில் அதிக ராக்கிங் நடக்க வாய்ப்புள்ளது,எனவே அரசு அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் ராக்கிங் நடக்காமல் இருக்க உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக மாணவ,மாணவி விடுதிகளில்,விடுதி காப்பாளர் கண்காணிப்பு தேவை எனவும், ராக்கிங் புகார் பெட்டி கண்டிப்பாக கல்லூரிகளில் இருக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment