Sep 1, 2015

இனி புதிய சிலிண்டர் வாங்க அலையவேண்டியது இல்லை,இணையம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதி துவக்கம்.


புதிய சமையல் சிலிண்டரை (NEW CONNECTION) இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் புதிய வசதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் தொடக்கி வைத்தார்.இதன் மூலம், இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் இனிமேல் புதிய சமையல் 
எரிவாயு இணைப்பு வாங்க அலைச்சல் பட வேண்டாம், 

விண்ணபிக்கலாம். இணையதளம் மூலமே இனி விண்ணப்பித்து சீக்கிரம் புதிய இணைப்பை பெற்றுகொள்ளலாம்.
நீங்கள் புதிய சமையல் எரிவாய்வு விண்ணப்பித்த
தகவல்கள் 48 மணி நேரத்தில் சரிபார்க்கப்பட்டு, வாடிக்கையாளரின் வீட்டின் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த முகவர் 3 முதல் 4 நாட்களில் சமையல் எரிவாயு உருளையை அளிப்பார், என்றும் மேலும் 2 கிலோ சமையல் எரிவாயு உருளைகளை விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசுவிரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.​

No comments:

Post a Comment