Aug 30, 2015

பணி நிரந்தர கோரிக்கை: பகுதிநேர ஆசிரியர்கள்



     தமிழக பகுதி நேர ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று  கோவை ராஜவீதி அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சங்க மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் தலைமைவகித்தார். 


         3 ஆண்டுகள் பணி முடிக்கும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என  ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் கூறுகையில், பணிநிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களது, கோரிக்கை மனுவை கலெக்டரை சந்தித்து, வழங்க உள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment