Aug 31, 2015

முதல் முறையாக ரயில்வே பணிகளுக்கு ஆன்லைனில் தேர்வு



இந்திய ரயில்வே துறை முதல் முதலாக ஆன்லைனில் தேர்வு நடத்துகிறது. இதில் சீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் ஆகிய 3,273 காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துகிறது.


நாடு முழுதும் இந்தத் தேர்வுகளை ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் உட்பட 242 நகரங்களில் பொறியாளர் பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் தேர்வுக்கு இதுவரை சுமார் 18 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.இந்தத் ஆன்லைன் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களும் ஆன்லைனில் வரவேற்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் உறுதியளித்துள்ளது.
இந்த ஆன்லைன் தேர்வு முறை பயனாளருக்கு எளிமையானதாக இருக்கும், தவறுகள் இல்லாத முறையில் அனைத்தும் நடைபெறும்.
தேர்வு எழுதுபவர்கள் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு எளிதில் செல்ல முடியும். மாநில மொழிகளிலும் வாசிக்கலாம், எழுதலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment