Sep 1, 2015

மூன்று ஆண்டுகளாக அறிவிப்பில்லாத ஆசிரியர் பணியிடங்கள்


கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகம் முழுவதும், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கப்படும், கூடுதல் புதிய பணியிடங்கள் அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
      இன்று நடக்கும் மானியக்கோரிக்கையில்இது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என கல்வித்துறை வட்டாரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. 

பள்ளிக்கல்வித்துறையின் கீழ், 2001 முதல் 10 வரை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான, ஐந்து ஆசிரியர்கள் பணியிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அதன் பின், தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஒன்பது ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில், 2,200 மேல்நிலைப்பள்ளிகளில் வரலாறு, வணிகவியல், பொருளியல் மற்றும் கணக்குபதிவியல்பணியிடங்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதே உண்மை.
ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமன்படுத்தும் பொருட்டு, 2011-12ம் ஆண்டு, 1,591 பணிஇடமும் 2012-13ம் கல்வியாண்டில், 1,591 பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. இப்பணியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்டவை என்று அழைக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, காலி பணியிடங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனரே தவிர, புதிதாக பணியிடங்கள் தோற்றுவிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில்,'பள்ளிக்கல்வித்துறையின் கீழ், தரம் உயர்த்தப்பட்ட பள்ளி களுக்கு இதுவரை, 3,181 பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், அறிவியல் பாடப்பிரிவுகளே ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில், புதிதாக பணியிடங்கள் உருவாக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால்,தரம் உயர்த்தப்பட்ட பள்ளி மாணவர்கள் அதிகம் பாதித்துள்ளனர்' என்றனர்.

2 comments:

  1. வணக்கம் ஆசிரிய நண்பர்களே .., நாமக்கல்,சேலம், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள முதுகலை இயற்பியல் ( PG PHYSICS) ஆசிரியா் எவரேனும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் அருகே உள்ள சூளகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பரஸ்பர பணிமாற்றம் (MUTUAL) மூலம் மாற்றம் பெற விரும்பும் நண்பர்கள் (9944502271, 9865156330) அழைக்கவும்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete