Aug 28, 2015

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு : பட்டதாரி ஆசிரியர்கள் இடமாற்றமில்லை



     ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால்,  பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது.மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள
பள்ளிகளின் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகமாக உள்ள அல்லது ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.

          இறுதிக் கட்டமாக ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் நேற்று முன்தினம் இந்த பணிநிரவல் கலந்தாய்வு துவங்கியது.

ஆனால், தெளிவான அணுகுமுறை இல்லை,இந்த பணி நிரவல் நடவடிக்கையில். ஆசிரியர்களை, உடனடியாக ஒரு பள்ளியில் இருந்து, மற்றொரு பள்ளிக்கு மாற்றினால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். அதே போல் பிற மாவட்டங்களுக்கு, திடீரென ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்வதும் கடினம் எனவே ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. , பள்ளிக் கல்வித்துறையின் இந்த முடிவால் 3,000 ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.