Aug 23, 2015

பரிசு தொகை அறிவிப்பு : SC,ST, மாணவர்களுக்கு

      ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர் 2014-15 ஆம் கல்வியாண்டில், கல்லூரி இறுதியாண்டு படிப்பினை முடித்த மாணவர்களுக்கு, பரிசு தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
      பரிசு தொகையை பெற தகுதிகள்: பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பில், 60 சதவீத தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
மேலும் அனைத்து ஆண்டுகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், மாணவர்கள் பரிசு தொகைக்கு  தேர்ந்தெடுக்கப்படுவர்.
கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்றப்பட்ட உயர் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், மாணவர்கள் பரிசித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுவர்க்கு 3000 முதல் 6000 ரூபாய் வரை பரிசு தொகை கிடைக்கும்.
டிசம்பர் 31 க்குள் பட்டியல் சென்றடைய வேண்டும். டிசம்பர் 31 பட்டியல் சென்றடைய கடைசி நாள் ஆகும்.
பரிசுத்தொகை குறித்து மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வரை அணுகவும்.