Sep 11, 2015

1.10 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் குஜராத் குறித்து ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் குஜராத் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக என்.ஜி.ஓ. ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் மாநிலத்தில் இந்த அவல நிலை உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


குஜராத் மாநிலத்தில் பல பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் பருத்தியும் ஒன்று. இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தி விதைகள் நாட்டின் 55 சதவீத தேவையை பூர்த்தி செய்கின்றன.
 இந்த உற்பத்தி பிரிவில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் அனைவரும் 14 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பருத்திவிதை உற்பத்தி பிரிவில் சுமார் 25 சதவீதம் அளவிற்கு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ஆந்திரா தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இந்த துறையில் குழந்தை தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த ஆய்வில் சில அதிர்ச்சி புள்ளிவிபரங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் : குஜராத் மாநிலத்தில் 56.7 சதவீத குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டவர்களாகவும், 34.3 சதவீதத்தினர் பள்ளிக்கு செல்பவர்களாகவும், சீசன் காலகட்டங்களில் முழு நேர தொழிலாளர்களவும் பணி புரிகின்றனர்.


இதுமட்டுமின்றி குழந்தை தொழிலாளர்களில் பெரும்பாலனவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குழந்தைகளும், தொடர்ந்து பிற இனத்தை சார்ந்த குழந்தை தொழிலாகளர்களாக பணி புரிந்து வருகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment