Sep 2, 2015

இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம் 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி,வங்கி பணிகள் இன்று முடக்கம்

12 அம்சகோரிக்கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


 தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சகோரிக்கைகள் முன் இப்போராட்டத்தில் வைக்கப்படுகின்றன.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை,எனவே வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கி, காப்பீடு, பொதுத்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்கள், மத்திய வர்த்தக சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன. தமிழகத்தில், ஆட்டோ, கால் டாக்ஸி ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்
வேலைநிறுத்தப் போராட்டத்தில் State Bank of india ( SBI ) ஊழியர்கள் மட்டும் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளன.எனவே SBI ​வங்கிகள் மட்டும் வழக்கம்போல் இயக்கம் என எதிர்பார்க்கபடுகிறது.

No comments:

Post a Comment