Sep 9, 2015

தமிழகத்தில் காலியாக உள்ள 143 அஞ்சல் பணியிடங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் தபால் பிரிப்பக கோட்டங்களில் காலியாக உள்ள 143 தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: தபால்காரர் - 143
 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 பணி: மெயில்கார்டு: 01
 தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 04.10.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க கடைசி தேதி: 11.09.2015.  
மேலும், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற கூடுதல் விபரங்களை தெரிந்துகொள்ள www.dopchennai என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment