Sep 25, 2015

143 பணியிடங்கள் தபால் துறையில்

அஞ்சல் துறை சார்பில், தபால்காரர், மெயில் கார்டு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலுள்ள, அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பு கோட்டங்களிலுள்ள, 142 தபால்காரர்,ஒரு மெயில் கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பொது பிரிவினருக்கான வயது வரம்பு, 18 - 27; பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர பிரிவினருக்கு, அரசு ஆணைகளின்படி, வயது தளர்வு வழங்கப்படும். விண்ணப்பிக்க, அக்., 4ம் தேதி கடைசி நாள் ஆகும்.

             கல்வித்தகுதி, 10ம் வகுப்பு; 'online' விண்ணப்பிக்க வேண்டும். சம்பள விகிதம், 5,200 - 20,200 ரூபாய்.  http://www.dopchennai.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்த வேண்டும்.


No comments:

Post a Comment