Sep 11, 2015

நாடெங்கிலும் நாளை முதல் வங்கிகளுக்கு 2 மற்றும் 4 சனிக்கிழமைகள் லீவு

நாட்டில் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2, 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் என்றும் இதனால் முறையே ஒன்று முதல் 3வது சனிக்கிழமைகள் முழு நேரமும் வங்கிகள் செயல்படும் நடைமுறை செப்டம்பர் 12ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.    


நாடெங்கிலும் ஏடிஎம் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் இ-பரிமாற்றம் அதிகரிப்பால் வங்கியில் சேவை செயல்பாடு குறைந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு வங்கி பணியாளர்களுக்கு 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு இந்திய வங்கிகளின் நிர்வாகிகள் அமைப்பு (ஐபிஏ) மற்றும் வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் உடன்பாடு செய்துகொண்டன.

அதன்படி, மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் அனைத்து வங்கிகளுக்கும் 2 மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறையை  செப். முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தின் 2வது சனிக்கிழமை
யும் (செப்டம்பர் 12) மற்றும் 4வது சனிக்கிழமையும் (செப்டம்பர் 26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இதனால் அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில் தங்களது வார நாள்களின் வேலைநேரத்தில் முழுமையாகச் செயல்படும். வங்கி பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் இதை மனதில் வைத்து வங்கி சேவையை பெற்றுக்கொள்ளலாம். 

No comments:

Post a Comment