Sep 3, 2015

ஜேம் 2016 தேர்வு எழுத போறீங்களா?அக்டோபர் 14க்குள் விண்ணப்பிச்சிடுங்க



நாட்டில் இந்திய அறிவியல் நிறுவனத்தில்(ஐஐடிக்கள்) வழங்கப்படும் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் சேருவதற்கான ஜேம்’ 2016 ஒருங்கிணைந்த அட்மிஷன் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



இந்தியாவில் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு தனியாக தேர்வு நடத்தப்படுவது யாவரும் அறிந்ததே.
அந்த வரிசையில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் வழங்கப்படும் ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்பு, 14 ஐஐடி-க்களில் வழங்கப்படும் இரண்டாண்டு எம்.எஸ்சி. படிப்பு, ஒருங்கிணைந்த எம்.எஸ்சி.-பிஎச்.டி, எம்.எஸ்சி.-எம்.டெக். உள்ளிட்ட பிற முதுநிலைப் பட்டப் படிப்புகளில் ஜேம்தகுதித் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

 இந்தக் கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களும் இந்தத் தகுதித் தேர்வை மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் கொள்கின்றன.
வரும் 2016ம் ஆண்டுக்கான ஜேம் தேர்வை சென்னை ஐஐடி நடத்துகிறது. 2016 பிப். 7ம் தேதி ஆன்-லைன் முறையில் இந்தத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலமாக இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அக்டோபர் 14-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment