Sep 3, 2015

தமிழகத்தில் 25 ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியராக தேர்வு.


தமிழகத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் 15 ஆரம்ப/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களும், உயர்நிலைப்பள்ளிகளில் இருந்து 7 பேர் என மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் விபரம் வருமாறு :  திண்டுக்கல் மாவட்டம் வில்வத்தம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி காளிமுத்து, சென்னை மணலி

புதுநகர் பகுதியில் உள்ள மீஞ்சூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த சொர்ணாபாய்,  தஞ்சாவூர் மாவட்டம் கீழ்மாந்தூர் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி பாலசுப்பிரமணியன்,  திருவள்ளூர் மாவட்டம் தலக்கஞ்சேரி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த தாஸ், உள்பட 15 ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


இதே போல் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர் பிரான்சிஸ் சேவியர் ஈரோடு மாவட்டம் குமளன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிஆசிரியர் தனபால் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன்  உள்ளிட்ட 7 பேர் மேல்நிலைப்பள்ளிகள் அளவில் நல்லாசிரியர் விருது பெற உள்ளனர். இந்த தகவலை மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment