Sep 9, 2015

குறைந்த பட்ச பிராட் பேண்ட் வேகம் 2 எம்பிபிஎஸ் அக்டோபர் முதல் அறிமுகப்படுத்துது பிஎஸ்என்எல்

கூடுதல் கட்டணமின்றி வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் குறைந்தபட்சம் 2 எம்பி வேகத்தில் பிராட்பேண்ட் சேவை வழங்க பிஎஸ்என்எல் தீர்மானித்துள்ளது.


 கடந்த 2014ம் ஆண்டு முதல் 2015 மார்ச் வரை சுமார் 1.98 கோடி சந்தாதாரர்களை பிஎஸ்என்எல் இழந்துள்ளது. இதில் தரைவழி இணைப்பு எண்ணிக்கை மட்டும் 20 லட்சம் குறைந்துள்ளனது. ஆகவே, தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக வாடிக்கையாளர்களை கவரும் வகையில்,
அக்டோபர் 1ம் தேதி முதல் குறைந்தபட்ச பிராட்பேண்ட் வேகத்தை விநாடிக்கு 512 கிலோபைட் என்பதை விநாடிக்கு 2 மெகாபைட்டாக (எம்பி)  அதிகரிக்க பிஎஸ்என்எல் முடிவு செய்துள்ளது.


இதுகுறித்து பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுபம்  ஸ்ரீவஸ்தவா கூறுகையில் கூடுதல் கட்டணமின்றி இந்த சேவை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

No comments:

Post a Comment