Sep 4, 2015

பிஎட் விண்ணப்பம் விநியோகம், முதல் நாளிலேயே 3 ஆயிரத்தை கடந்தது


தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கி உள்ளது. விண்ணப்பங்கள் முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் கடந்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டுகளை விட அதிகம் என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.


சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் 2015-16 கல்வியாண்டு பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்துகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 13 மையங்களில் வியாழனன்று (செப்.3) தொடங்கியது. செப். 10ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்நிலையில் விண்ணப்ப விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது தெரியவந்துள்ளது.

பி.எட். கலந்தாய்வுக்கு கடந்த ஆண்டுகளைக் கருத்தில் கொண்டு 8 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடித்திருந்த நிலையில் முதல் நாளிலேயே 13 மையங்களிலும் 3,200 விண்ணப்பங்கள் விநியோகமாகியுள்ளதாக  பி.எட். சேர்க்கை செயலரும், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வருமான ஆர். பாரதி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சென்னையில் உள்ள 2 மையங்களில் விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன மையத்தில் மட்டும் அதிகபட்சமாக 500 விண்ணப்பங்களும், சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரி மையத்தில் 150 விண்ணப்பங்களும் விநியோகமாகியுள்ளன.

 தூத்துக்குடி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட 109 விண்ணப்பங்களில், 100 விண்ணப்பங்கள் விநியோகமாகிவிட்டன.கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இது அதிகமாகும். மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்துக் காணப்படுவதால் கூடுதலாக 2 ஆயிரம் விண்ணப்பங்களை அச்சடிக்க முடிவுசெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment